actor Vijay

வழிகாட்டியாக இருக்க வேண்டியவர் ஒழுக்கமாக இருக்க வேண்டாமா? தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்!

By Elango on மாசி 21, 2026

Spread the love

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பிரபல காமெடி நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, மனைவி விஜயுடன் இல்லை. மகன் விஜயுடன் இல்லை. மகள் விஜயுடன் இல்லை. விஜய் மட்டும் தனியாக ஒரு பங்களாவில் இருந்து வருகிறார். மனைவி மகன் மகள் இருந்தும் நடிகர் விஜய் தனியாக வாழ்கிறாரே ஏன்? நடிகை திரிஷாவுடன் 2 முறை தனி விமானத்தில் கோவா சென்று வந்தாரே அது ஏன்? அவர் நடிகராக இருந்தால் நமக்கு பிரச்னையே இல்லை. அவர் நடிகர் அவர் நடிகை இருவரும் ஒன்றாக போகலாம். தப்பே இல்லை. டிஸ்கஷனுக்கு கூட போகலாம்.

ஆனால் அவர் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவர். எங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்க வேண்டியவர். நாங்கள் எல்லாம் எங்களுக்கு வழிகாட்டியாக இருப்பவரிடம் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒழுக்கம் நிறைந்தவராக விஜய் இருக்க வேண்டும். ஆனால் அந்த ஒழுக்கம் என்பது விஜய் கிட்ட இல்லையே? அதனால் தான் அவர் விமர்சனத்துக்கு உள்ளாகிறார் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.