ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அந்த வகையில் புதிதாக ஒரு சீரியல் தொடங்க உள்ளது. அந்த சீரியலுக்கு மௌனம் பேசியதே என டைட்டில் வைத்துள்ளனர். இந்த சீரியலில் பிரபல காமெடி நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா ஹீரோயினாக நடிக்கிறார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியல் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு ஒரு சில காரணங்களால் ஜோவிதா அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு அருவி சீரியலில் ஹீரோயினாக நடித்தார். இந்த சீரியல் பல எபிசோடுகளை கடந்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.

#image_title
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அருவி சீரியலும் முடிவடைந்தது இப்போது ஜீ தமிழில் புதிதாக தொடங்கும் மௌனம் பேசியதே சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் மௌனம் பேசியதே சீரியல் பிரபல நடிகரான அசோக் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ரிலீசான முருகா திரைப்படத்தின் மூலம் அசோக் திரைலகம் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பிடிச்சிருக்கு, கோழி கூவுது, உலா, வானம் பார்த்த சீமையிலே, பிரியமுடன் பிரியா, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இப்போது படம் வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
