Connect with us

காதல் மனைவியுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் விஜயின் ரீல் தந்தை…! வெளியான புகைப்படங்கள்…!

CINEMA

காதல் மனைவியுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் விஜயின் ரீல் தந்தை…! வெளியான புகைப்படங்கள்…!

 

தமிழ் சினிமாவில் வில்லனாகவும் , குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர்1986 இல் கன்னடத்தில் வெளியான ‘ஆனந்த்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஒடியா, ஆங்கிலம் என 11 மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார்.

   

பகவதி, தமிழன் படத்தில் விஜய்க்கு எதிராக வில்லன் வேடத்தில் நடித்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி 2004ல்  கில்லி திரைப்படத்தில் அப்பா ரோலில் நடித்து பட்டையை கிளப்பினர். தனுஷின் உத்தமபுத்திரன் படத்திலும் கலக்கலாக நடித்திருப்பார். இவர் தற்பொழுது பல மொழிகளில் பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

கடந்த சில வருடங்களாக இவர் தமிழில் நடிப்பதில்லை என்றாலும் ,தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்பொழுதும் நடித்து வருகிறார். இவர் Rajoshi Barua என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி தனது 60வது  வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அஸாமின் கவுகாத்தியை சேர்ந்தவர் ரூபாலி. அவர் கொல்கத்தாவில் ஒரு ஃபேஷன் ஸ்டோர் நடத்தி வருகிறார். ரகசியமாக நடந்த இத்திருமணத்தில் அவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இவர்  தனது காதல் மனைவியுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு   எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர அப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Continue Reading
To Top