#image_title
தமிழ் சினிமாவில் தலைமுறை தலைமுறையாக பலர் நடித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர் தான் நடிகர் விஜயகுமார் இவர் 70 80’ஸ் கால கட்டங்களில் படங்களில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து இவரது மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக அசத்தி வருகிறார். அருண் விஜயின் மகனும் தற்போது சினிமாவில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விஜயகுமாரின் முதல் மனைவி முத்துகண்ணு இவர் கடந்த 1969ல் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர்தான் அருண் விஜய். அருண் விஜய் உடன் பிறந்தவர்கள் அனிதா, கவிதா. அனிதா கோகுலகிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார், அனிதாவும் ஒரு டாக்டராவர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.
இவரது மகள் தியாவிற்கு கடந்த சில மாதத்துக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அனிதா. நேற்று திடீரென்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது பலரும் ஆசைப்படும் பலரின் கனவாக இருக்கும் ஒரு வேலையில் நான் இருந்தேன். ஆனாலும் தற்போது ஒரு தைரியமான முடிவை எடுத்து அதிலிருந்து வெளியேறியுள்ளேன்.
என் வாழ்க்கையின் முதல் பாதியில் நான் கடினமாக உழைத்தேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டது. ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்தேன். குடும்பம், வேலை இரண்டையும் சிறப்பாக செய்தேன். நான் 50 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்தேன். அது ஒரு தைரியமான முடிவு. அதனை நான் இப்போது எடுத்து உள்ளேன் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் பல உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டு இந்த வேலையிலிருந்து வெளியேறுவதை குறித்து பகிர்ந்திருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.
பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமுவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம்…
1990-களில் சில்க் சுமிதாவின் தங்கையாகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ஷகிலா, குறுகிய காலத்திலேயே மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத…
கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…
ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை…