தமிழ் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் விஜயகுமார். இவர் அதிக அளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.
இவருக்கு முத்துகண்ணு மற்றும் மஞ்சுளா இன்று இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி முத்து கண்னுக்கு அனிதா, கவிதா, அருண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி மூன்று மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
முதல் மனைவி முத்துக்கண்ணுவின் பிள்ளையான கவிதா விஜயகுமார் ‘கூலி’ என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார்.
அருண் விஜய் ஹீரோவாக நடித்து சமீபத்தில் ‘யானை’ திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேருமே ஹீரோயின்களாக நடித்தவர்கள்.
ஆனால் இவர்களில் வனிதா மட்டுமே தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார்.தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதா விஜயகுமார் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்.
இவரை தவிர மற்ற நான்கு சகோதரிகளும் அவர்களுக்கு ஒரே சகோதரனான அருண் விஜயையும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
தற்பொழுது இவர்கள் குடும்பமாக இணைந்து நேற்று வரலக்ஷ்மி பூஜையை பக்தியுடன் கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…
ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர்…
மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் அஸ்வினி…