தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் பிரபலங்களுடைய வாரிசுகளும் சினிமாவில் களமிறங்கி வருகிறார்கள். அப்படி 80களில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக இருந்த ஒரு பிரபலத்தின் மகன் இப்பொழுது சினிமாவில் களமிறங்கி சாதிக்க தொடங்கியுள்ளார். ஆனால் திறமையிருந்தும் ஆரம்பத்தில் அவருடைய படங்கள் சரியாக ஓடவில்லை. அதற்கான நல்ல பெயரும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் மிகவும் கஷ்டப்பட்ட அந்த நடிகருக்கு வரப் பிரசாதமாக அமைந்தது அஜித்தின் படம் தான்.

அஜித் படத்தால் அந்த நடிகருடைய தலையை எழுத்து மாறியது என்றே சொல்லலாம். அந்த நடிகர் வேறு யாருமில்லை அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலமாக நடித்து வரவேற்பு பெற்ற நடிகர் தான் அருண் விஜய். இதனை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவரின் நடிப்பில் கடைசியாக பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
