தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் அர்ஜுன் அவரது மகளின் திருமணத்திற்கு முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று நேரில் அழைத்த புகைப்படங்கள் எடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுன்.
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் மிகவும் எளிமையாக இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வந்தன.
மேலும் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்தான் உமாபதி. அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர் தான் அர்ஜுன். அதன் மூலம் ஐஸ்வர்யாவுக்கும், உமாபதிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் அர்ஜுனுக்கும் உமாபதியை பிடித்து போக இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
நடிகர் உமாபதி அதாகப்பட்டது, மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கின்றார். ஐஸ்வர்யாவும் விஷாலும் பட்டத்து யானை படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க கூடாது என்று தம்பி ராமையா கூறியதாக தெரிவித்திருந்த நிலையில் இது குறித்து ஐஸ்வர்யாவும் இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பல மாதங்களான நிலையில் எப்போது திருமணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
அதனால் வருகிற ஜூன் 10ஆம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா மற்றும் உமாபதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு பலருக்கும் அழைப்பிதழ் வைக்கும் பணியை தொடங்கி இருக்கின்றார் அர்ஜுன் மற்றும் ராமையா. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற அர்ஜுன் மற்றும் ராமையா அவருக்கு அழைப்பிதழ் வைத்திருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.