Connect with us

மகளின் திருமணம்.. இத்தனை கோடியை வரதட்சணையாக கொடுத்திருக்காரா நடிகர் அர்ஜுன்..? பிரபலம் சொன்ன தகவல்..!

CINEMA

மகளின் திருமணம்.. இத்தனை கோடியை வரதட்சணையாக கொடுத்திருக்காரா நடிகர் அர்ஜுன்..? பிரபலம் சொன்ன தகவல்..!

 

நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் வரதட்சணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் அர்ஜுன். 90’ஸ் மற்றும் 20’ஸ்-களில் ஏகப்பட்ட ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபல நடிகராக வலம் வந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி, முரளி என பல ஹீரோக்கள் டாப்பில் இருந்து நேரத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் அர்ஜுன்.

   

பின்னர் மார்க்கெட் குறையவே ஹிரோவாக நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தொடர்ந்து சினிமாவில் நடித்து அசத்தி வருகின்றார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும், அவர் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமையா மகன் உமாபதி ராமையாவும் காதலித்து வந்தனர். இது தொடர்பாக அவர்கள் வீட்டில் தெரிவிக்க இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டனர். பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஜூன் 10ஆம் தேதி கெருகம்பாக்கத்தில் அர்ஜுன் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் படு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி சென்னையில் இருக்கும் லீலா பேலஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஷாலினி, சினேகா, பிரசன்னா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அது மட்டுமில்லாமல் முதல்வர் முக ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், விஜய பிரபாகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து பிரஸ்மீட் நடத்தப்பட்டது. அதில் தனது மகள் திருமணம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக அர்ஜுன் பேசியிருந்தார். அர்ஜுன் தனது மகளுக்கு 500 கோடி வரதட்சனை வழங்கியதாக கூறப்படுகின்றது. இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்திருந்ததாவது: “நடிகர் அர்ஜுனுக்கு சென்னை போரூரில் பல இடங்கள் இருக்கின்றது. ஏன் ஒரு கிராமமே அவருக்கு இருக்கிறது.

கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு கொண்ட இவர் ஆடம்பர சொகுசு பங்களாவை தனது மகளுக்கு சீதனமாக வழங்கியிருக்கின்றார். 500 கோடி வரதட்சணையும் கொடுத்திருக்கின்றார். இவை எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என்று கூறி இருக்கின்றார். நடிகர் அர்ஜுனுக்கு 1000 கோடி வரை சொத்து மதிப்புள்ளதாக கூறிவரும் திரையில் தனது மகளுக்கு அதில் 500 கோடியை வரதட்சணையாக கொடுத்திருக்கின்றார்” என்று பலரும் கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top