தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ள நிலையில் பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. அடுத்த மாதம் 14ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களில் பட குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். படத்தின் ப்ரோமோஷனல் அடுத்தடுத்து மும்பை மற்றும் சென்னை என நடைபெற்று வருகிறது. மும்பை மற்றும் டெல்லியில் சூர்யா உள்ளிட்ட படகு குழுவினர் ரசிகர்களை நேரில் சந்தித்தனர். அதேசமயம் சூர்யா தனிப்பட்ட முறையிலும் பல பேட்டிகளை கொடுத்துள்ளார்.
இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் இரு வேறு கெட்டப்புகளில் சூர்யா படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பின்னணியில் படம் உருவாகியுள்ள நிலையில் இந்த காட்சிகள் படத்தில் மொத்தமாக 2 மணி நேரங்கள் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இப்படியான நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பட குழுவினர் மற்றும் மற்ற நடிகர்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆர் ஜே பாலாஜி சூர்யா 45 வது திரைப்படத்தின் அப்டேட் குறித்து பேசி உள்ளார். அதில், தமிழ் சினிமாவோட முதல் மூன்று நபர்களை தேடினால் இரண்டு இடத்துல சிவா சார்தான். அந்த அளவிற்கு அவர் ரொம்ப நல்லவர். இதே நேரு ஸ்டேடியத்தில் நான் நிகழ்வை தொகுத்து வழங்கி இருக்கேன். ஆனா இன்னைக்கு சூர்யா 45 இயக்குனராக வந்திருக்கேன்.
இதுக்கெல்லாம் காரணம் சூர்யா சார் என் மேல வைத்த நம்பிக்கை தான். சமீபத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது ஒரு பெரிய இயக்குனர் உடைய உதவி இயக்குனர்கள் அதே ஹோட்டலில் இருந்தாங்க. சாப்பிட்டு முடிச்சதும் என்கிட்ட அவங்க இந்த பெரிய இயக்குனர்களின் கதை எல்லாம் சூர்யா சார் ரிச்சர்ட் பண்ணி இருக்கார், உங்களை எப்படி இயக்குனராக தேர்ந்தெடுத்தார் என்று கேட்டார்கள். நான் சிரிச்சிட்டே போயிட்டேன். சூர்யா சார் என் மேல வைத்த நம்பிக்கைக்கு நன்றி. ட்விட்டரில் what are you cooking bro என்று கேட்கிறீர்கள். பயங்கரமான அடுத்த வருஷம் சமைச்சு தரப்படும். அதுக்கு நான் உத்தரவாதம் என்று ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளார்.