ரெடியாகும் ‘காஞ்சனா 4’.. இந்த நடிகை தான் ஹீரோயின்-ஆ போடணும்.. லாரன்ஸிடம் அடம்பிடிக்கும் ரசிகர்கள்..

By Mahalakshmi on ஆனி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பேய் படங்களை இயக்கி மிகவும் பிரபலமாக வலம் வரும் ராகவா லாரன்ஸ் மீண்டும் காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது மிகச்சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் அசத்தி வருபவர் ராகவா லாரன்ஸ். நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த சமூக சேவகராகவும் திகழ்ந்து வருகிறார். கடந்த மே ஒன்றாம் தேதி முதல் சேவை என்று அறக்கட்டளையை தொடங்கி அதில் ஏராளமான பிரபலங்கள் இணைந்து முடியாதவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

   

   

அதன்படி 10 மாவட்டங்களுக்கு டிராக்டர் வழங்குவதாக கூறியிருந்தார். அதனை சிறப்பாக செய்து வருகின்றார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருப்பார். ஹாரர் படமாக உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

அதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு சரத்குமார் அவர்களை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து காஞ்சனா என்கின்ற திரைப்படத்தையும் வெளியிட்ட இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனால் அடுத்தடுத்து 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு காஞ்சனா படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகத்தை வெளியிட்டு இருந்தார். இதில் மூன்றாவது பக்கம் சுமாரான வெற்றியை கொடுத்தது.

இந்த அனைத்து திரைப்படங்களையும் இயக்கியது ராகவா லாரன்ஸ் தான். இந்நிலையில் அடுத்ததாக காஞ்சனா 4 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வேறு சில படங்களில் கவனம் செலுத்தி வரும் ராகுவா லாரன்ஸ் மீண்டும் காஞ்சனா சீரியஸை இயக்க இருக்கின்றார். வருகிற 2025 ஆம் ஆண்டு காஞ்சனா திரைப்படத்தில் நான்காவது பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மிருனாள் தாகூரை நடிக்க வைக்க ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.