Categories: சினிமா

அந்தப் பழக்கத்தால் 10 வருஷம் சினிமாவில் இருந்து வனவாசம்.. எல்லா திறமையும் இருந்தும் தோற்ற ஆனந்த்பாபு..

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

இவரின் வாரிசான ஆனந்த் பாபு தன்னுடைய 20 ஆவது வயதிலேயே ஹீரோவானார். அப்போது உச்சத்தில் இருந்த டி ராஜேந்தர் இயக்கிய டி ராஜேந்தர்’தங்கைக்கு ஒரு கீதம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் கவனம் பெற்ற நிலையில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படமாக ‘பாடும் வானம்பாடி’ அமைந்தது.

இந்த படத்தில் அவர் ஒரு டிஸ்கோ டான்சர் வேடத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது டிஸ்கோ நடனக் காட்சிகள் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்தன. அவரின் நடனத்துக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. அதன் பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

அவர் நடித்தவற்றில் உதயகீதம், இளமை, விசுவநாதன் வேலை வேணும், பார்த்த ஞாபகம் இல்லையோ, அர்த்தமுள்ள ஆசைகள், வீடு மனைவி மக்கள், புரியாத புதிர், புது புது ராகங்கள், புது வசந்தம், சிகரம், சேரன் பாண்டியன் ஆகியவை முக்கியமான படங்களாக அமைந்தன. இப்படி பிஸியான நடிகராக இருந்த ஆனந்த் பாபு 90 களின் இறுதியில் திடீரென்று காணாமல் போனார். அதற்குக் காரணம் அவருக்கு இருந்த அளவுக்கு மிஞ்சிய குடிப்பழக்கம்தான் என சொல்லப்பட்டது.

1999 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு ஆதவன் படத்தில் திரும்பி நடிக்கும் வரை 10 ஆண்டுகள் அவருக்கு சினிமாவில் ஒருவாய்ப்புக் கூட கிடைக்கவில்லை. குடியில் இருந்து மீண்ட அவர் அதன் பிறகு சில படங்களிலும் இப்போது சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

vinoth

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

6 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

6 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

6 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

6 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

6 மணத்தியாலங்கள் ago