Categories: சினிமா

ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டை நடத்தும் ‘புஷ்பா 2’… OTT உரிமை மட்டும் இத்தனை கோடியா..? என்னப்பா சொல்றீங்க…

Spread the love

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. சந்தன மர கடத்தல் அதில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், தனன்ஜெயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா நடனமாடிய ‘ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா’ என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா, வசூலில் சாதனையும் படைத்தது.   தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி உள்ளது. இந்த பாகத்தில் நடிகர்கள் ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ் போன்றோர் புதிதாக இணைந்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புஷ்பா 2 படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. அதோடு மட்டுமின்றி ரசிகர்களின் ஆர்வத்தையும் வெகுவாக தூண்டியுள்ளது.

இந்நிலையில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘புஷ்பா 2’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம்  ரூ.100 கோடி கொடுத்து கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல அப்படத்தின் ஆடியோ உரிமையை டீ-சீரிஸ் நிறுவனம் ரூ.60 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாம். இப்படி ரிலீசுக்கு முன்பே ‘புஷ்பா 2’ படம் கல்லா கட்டி வருவது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

Begam

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

53 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

58 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago