#image_title
பிரபல கன்னட நடிகரான யாஷ் தற்பொழுது இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இவரை அந்த அளவிற்கு உயர்த்தியது 2018 இல் வெளியான கேஜிஎப் சாப்டர் 1 திரைப்படம் தான். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் இவர் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. குறிப்பாக இத்திரைப்படம் உலகம் எங்கும் 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கன்னட சினிமாவின் பிரபல நடிகரான யாஷின் உண்மையான பெயர் நவீன் குமார்.
இவர் 2007 இல் ஜம்படா ஹுடுகி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். இவரது திரை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘மோகினி மனசு’. இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து ராக்கி, கல்லற சந்தே, கோகுலா, மோடலசாலா, ராஜதானி என்ற படமும், களவாணி படத்தின் ரீமேக்கான கிரட்டகா,
சுந்தரபாண்டியன் ரீமேக்கான ‘ராஜாஹூளி’ , ‘கஜகேசரி’, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ராமாச்சாரி’, ‘மாஸ்டர் பீஸ்’, சந்து ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டு’, ‘கே.ஜி.எஃப்’, கே.ஜி.எஃப் 2 என அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது யாஷ் பிரசாந்த் நீள் இயக்கத்தில் கேஜிஎப்3 பாகத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமின்றி இவர் ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்பொழுது இவரின் ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ராக்கிங் ஸ்டார் யாஷ் தற்பொழுது திரையுலகில் தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்து கலக்க உள்ளார். இதனையறிந்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…