திடீரென திருமணம் செய்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அகிலன்… மணப்பெண் இவர் தானா?… wedding clicks… 

By Begam

Published on:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த முக்கிய தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் அருண் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக ரோஷ்ணி நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து ரோஷினி சீரியலை விட்டு விலக  வினுஷா தேவி நடிப்பில் இந்த சீரியல் முடிவடைந்தது.

   

இந்த தொடரில் இரண்டாவது ஹீரோவாக நடித்து பிரபலமானவர் அகிலன்.இந்த தொடரில் நடித்து வரும்போதே சில படவாய்ப்புகள் வர , சீரியலில் இருந்து விலகினார். இவர் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து  பாரதி கண்ணம்மாவில் தனக்கு ஜோடியாக நடித்த கண்மணியுடன் இணைந்து நடித்த ‘ஹோரா ஆல்பம்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தவிர பீட்சா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் அகிலன்.இவர் Modern Love Chennai என்ற சீரிஸில் நடித்துள்ளார். அவர் இனி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக கூறி இருந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் அகிலனுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அக்ஷயா முரளிதரன் என்ற அவரது காதலியை தான் தற்போது அவர் கரம் பிடித்து இருக்கிறார். இதனை அவரே தனது திருமண புகைப்படங்களுடன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Agilan pushparaj (@akilan.spr)