அஜித்தை நம்பிய தயாரிப்பாளருக்கு நாமம் போட்ட குட் பேட் அக்லி.. மொத்த வசூல் இவ்வளவுதானா..?

By Nanthini on வைகாசி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன் இறுதியாக விஷாலை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 100 கோடி வரை வசூல் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படம் தான் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரான இவர் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி இருந்தது.

Ajith Kumar Good Bad Ugly First Day Box Office Collection Details | குட்  பேட் அக்லி முதல் நாள் வசூல் நிலவரம்.. இத்தனை கோடியா? | News in Tamil

   

அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த சூழலில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரெட் டிராகனாக அஜித்தை ஃபேன்ஸ்களுக்காக ட்ரீட் ஆகவே படத்தை இயக்கிக் கொடுத்தாலும் இந்த படம் 300 கோடி வசூலை தொடவில்லை. விஜயின் மெகா சீரியல் படமான வாரிசு திரைப்படமே 300 கோடியை தொட்டதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

   

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் எப்படியிருக்கு? எக்ஸ் விமர்சனம் இதோ!

 

லியோ மற்றும் கோட் படங்கள் எல்லாம் பெரிய வசூல் வேட்டையை நடத்தி இருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு அஜித்துக்கு மட்டுமே சம்பளம் ஆக 165 கோடி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் மட்டுமே 146 கோடி மட்டும் தான் படம் வசூல் செய்துள்ளது. அதே சமயம் உலக அளவில் இந்த திரைப்படத்தின் வசூல் 212 கோடி என்று தான் படத்தை தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருந்த நிலையில் அதிகபட்சமாக 66 கோடி வரை நஷ்டம் என கூறியுள்ளது.

5 நாட்களில் குட் பேட் அக்லி உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்.. எவ்வளவு  தெரியுமா

அஜித் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் இதுதான் என்று கூறப்பட்டாலும் இந்த படம் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் படத்தின் வசூலை கூட தொடவில்லை என்பதுதான் சோகமான விஷயம். படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களில் ஒட்டுமொத்தமாக 212 கோடி வசூல் மட்டுமே வந்துள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உலக அளவிலான வசூல் அறிவிப்பை இதுவரை வெளியிடாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.