இன்று 100 கோடி சம்பளம் வாங்கும் அஜித்.. பிரபல நடிகைக்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தது உங்களுக்கு தெரியுமா..?

By Nanthini on மாசி 20, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் பிறகு இவருடைய படம் எதுவும் வெளியாகவில்லை. சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விடாமுயற்சி.

நான் கடவுள் படத்தில் அஜித் நடித்தரா.? வைரலாகும் அஜித்தின் அட்டகாசமான போட்டோஸ்.. - Tamil Spark

   

இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறவில்லை. இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி இருந்த நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் அடிவாங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி என்ற திரைப்படத்திலும் திரிஷா இவருக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் இந்தத் திரைப்படம் வருகின்ற மே மாதம் வெளியாக உள்ளது.

   

அஜித் குமாரின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்யுமா? | Ramesh Bala tweeted, Ajith Kumar's Vidamuyarchi and Good Bad Ugly box ...

 

இப்படியான நிலையில் தற்போது 100 கோடிக்கு மேல் ஒரு படத்தில் நடிக்க அஜித் சம்பளம் வாங்கி வரும் நிலையில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடிகைக்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். அதாவது அஜித் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த திரைப்படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். ஸ்ரீதேவி கதையின் நாயகியாக நடித்திருந்த இந்த திரைப்படத்தில் அஜித் கேமியா ரோலில் நடித்திருந்தார். அந்த சிறிய ரோலில் நடிப்பதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம்.

ஸ்ரீதேவிக்காக படம் நடித்துக் கொடுக்கிறாரா, அஜித்?

நடிகை ஸ்ரீதேவி மீது உள்ள மதிப்பு மற்றும் மரியாதையின் காரணமாக அஜீத் அந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம் ஸ்ரீதேவியின் குடும்பத்துடன் அஜித் ஒரு உறவையும் வளர்த்துக் கொண்டார். பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் அஜித் முக்கிய வேடத்தில் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதே சமயம் தொடர்ந்து அஜித்துடன் மூன்று படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.