Categories: சினிமா

சமாதான கொடியை பறக்க விட்ட லைக்கா.. மனமிறங்கிய அஜித்.. அப்புறம் என்ன சட்டுபுட்டு கிளம்புங்க..!

Spread the love

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றார்கள். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு இந்த திரைப்படத்திற்கு பிறகு லைக்கா ப்ரொடக்ஷன் கூட்டணியில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்த திரைப்படத்தை ஜவ்வாக இழுத்து வருகிறார்கள். இப்படத்தின் அப்டேட் கேட்டு ஒரு வழியாக ரசிகர்கள் டயர்ட் ஆகிவிட்டார்கள். இதற்கு இடையில் இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஆதிக்க ரவிச்சந்திரன் கூட்டணியில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் கமிட்டானார். இப்படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக நிறைவடைந்து விட்டது இன்னும் சிறிது நாட்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகின்றது.

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது. தற்போது அஜித் இரண்டு வார கால விடுமுறை பயணமாக சென்னை வந்துள்ளார் இதற்கிடையில் விடாமுயற்சி திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில் அந்த படத்தை எடுத்து முடித்த பாடு இல்லை, தொடர்ந்து இப்படம் வருமா? வராதா? என்று ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

முதலில் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களே தற்போது அதைக் கேட்பதை கூட விட்டு விட்டார்கள். இதற்கு முதல் காரணம் லைக்கா பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது தான். அஜித் தரப்பிலும் ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் புரொடக்சன் தரப்பில் கொஞ்சம் இழுப்பறியாக எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் லைக்கா நிறுவனம் அஜித்துக்கு பேசிய சம்பளத்தையும் கொடுக்க வில்லையாம்.

இதைத் தொடர்ந்து லைக்கா நிறுவனமும் அஜித்தும் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வழியாக சமாதான புறாவை பறக்க விட்டிருக்கிறார்கள். இன்னும் மூன்று நாட்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் வெளிநாடு செல்ல இருக்கின்றார். சொன்னபடி அங்கு விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கின்றது.

இதற்கு இடையில் ஒன்றாம் தேதி மறுபடியும் சொந்த வேலை காரணமாக சென்னை வந்துவிட்டு அவர் திரும்ப இருக்கின்றார்.  பிறகு விடாமுயற்சி படம் பிடிப்பில் கவனம் செலுத்த இருக்கின்றார்.  இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் அடுத்ததாக குட் பேக் அக்லி திரைப்படத்தில் கவனம் செலுத்த இருக்கின்றார். எப்படியும் இந்த வருடம் இறுதியில் இப்படம் ரிலீஸ்-ஆகி விடும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

1 மணத்தியாலம் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

1 மணத்தியாலம் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

2 மணத்தியாலங்கள் ago