முதல் முறையாக ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டடை அதிகாரபூர்வமாக வெளியிட்ட LYCA.. அசர்பைஜானில் முடிந்த ஷூட்டிங்.. அப்போ அடுத்து எங்கே..?

By Mahalakshmi

Updated on:

தற்போது தல அஜித் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விடா முயற்சி; லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ்திருவேணி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, ஆரவ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்கள்.

   

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் அஜர்பைஜானில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக  படப்பிடிப்பை நடத்த முடியாமல் படக்குழுவினர்  திணறி வந்தனர். அதனால் படக்குழு சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது அஜித்தின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருப்பவர் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா.

சுரேஷ் சந்திராவும் லைக்கா நிறுவனமும் இணையதள பக்கத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தையும் பகிர்ந்து விடாமுயற்சிக்கான புதிய அப்டேட்டையும் கொடுத்திருக்கிறார்.
அதாவது அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது என்றும் இனி அடுத்த கட்ட படப்பிடிப்பு வேறொரு புதிய இடத்தில் நடத்தப்படும் என்றும் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதாவது சாமி வேறொரு ரூபத்தில் தான் வருவார் என்று சொல்வார்கள்.

அப்படி அஜித் தந்து ரசிகர்களிடம்  சுரேஷ் சந்திராவின் ரூபத்தில் பேசி கொண்டுள்ளார்.  விடாமுயற்சி படம் வெளிவரவே இல்லையென்றாலும் அஜித்தை பற்றி அவ்வப்போது எதாவது ஒரு அப்டேட்டை கொடுங்கள் என சுரேஷ் சந்திராவுக்கு அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில்  சுரேஷ் சந்திராவே அவருடைய பக்கத்தில் அஜித்தை பற்றி  போட்ட பதிவு  ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்த மாதிரி அமைந்தாகிவிட்டது. இதையும்  அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். மேலும், இணையத்தில் வெளிவந்த தகவலின்படி விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஷார்ஜாவில் நடக்கும் என்பதாக சொல்லப்படுகிறது.

author avatar
Mahalakshmi