நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
)
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக நேற்று விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. ஏகப்பட்ட கட்டவுட்டுகள் வைக்கப்பட்டு பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் பண்டிகையாக விடாமுயற்சி திரைப்படத்தை கொண்டாடினர். அஜர்பைஜானில் தனது காதல் மனைவியை கடத்திய கும்பலிடம் இருந்து அவரை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்ற கதைக்களத்தை கொண்ட விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இப்படியான நிலையில் விக்னேஷ் சிவன் இன்ஸ்டா ஸ்டோரியில் விடாமுயற்சி படம் குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனும் அஜித்தின் தீவிர ரசிகர் தான். எந்த ஒரு திரைப்படம் வந்தாலும் முதல் நாளே தியேட்டருக்கு கிளம்பி போய் படத்தை பார்த்து விடுவார். நேற்று வெளியான விடாமுயற்சி திரைப்படத்தையும் முதல் நாளே பார்த்த விக்னேஷ் சிவன் அந்த படத்தை பாராட்டி பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், விடாமுயற்சி திரைப்படம் இன்டென்ஸான திரில்லர் படமாக உள்ளது. புதிர்களை சால்வ் பண்ணும் விதமாக ஏகப்பட்ட ட்விஸ்ட்களையும் திருப்பங்களையும் மயில் திருமேனி வைத்துள்ளார். அஜித்தின் பிரசன்ஸ் படம் முழுவதும் ஒவ்வொரு ஃபிரேமிலும் தாறுமாறாக உள்ளது. அனிருத் இன் பின்னணி இசையில் அவர் நடந்து வரும் காட்சிகளும் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளும் மிரட்டுகிறது. திரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றி படம் கிடைத்துள்ளது வாழ்த்துக்கள் என்ற விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார் m
