ஹாலிவுட் ஹீரோயின் போன்ற புதிய லுக்கில் நடிகர் அஜித்தின் மச்சினிச்சி… வைச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்… இதோ வீடியோ…

By Begam on ஆவணி 14, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் அஜித் நடிகை ஷாலினி 2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

 

   

   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தல அஜித்திற்கு ஒரு மச்சினிச்சி உள்ளார். அவர் பெயர் ஷாமிலி. இவர் 1990ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ திரைப்படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து அனைவரையும் அசத்தியவர் பேபி ஷாமிலி. இதற்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்தது.

 

இதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவர் 2016 விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஷாமிலி கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார்.

 

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஷாமிலி.  இவர் அப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டில் சுற்றி தெரியும் வீடியோ ஒன்றை ஷாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ …

 

View this post on Instagram

 

A post shared by Shamlee (@shamlee_official)