Actor Ajith Kumar

அவர் அப்படி செய்யலாமா? கூடாதா என்ற விவாதங்கள் வரவே செய்யும் – வெளிப்படையாக பேசிய நடிகர் அஜீத்குமார்!

By Elango on மாசி 7, 2026

Spread the love

துபாயில் கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்று வரும் நடிகர் அஜீத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கார் ரேஸ் எனக்கு மிகவும் முக்கியமானது. பெரும்பாலான நேரங்களில் ஒருவர் தனது சவுகரியத்தை விட்டு வெளியே வரும்போது அவர் அப்படி செய்யலாமா? கூடாதா என்பது போன்ற பல விமர்சனங்களும் விவாதங்களும் எழுகின்றன. ஆமாம் நான் அதை எதிர்கொள்கிறேன். மலேசியா துபாய் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுக்கு நன்றி.

சர்க்யூட் ஆப் ஸ்பாவில் என்னை ஆதரிக்க சுமார் 9 ஆயிரம் ரசிகர்களும் நர்பர்கிங்கில் 6 ஆயிரம் ரசிகர்களும் வந்திருந்தனர். நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இது எனக்கு உறுதிப்படுத்துகிறது. உண்மையைச் சொல்லப்போனால் நான் இதை எனக்காக செய்யவில்லை. எனக்கு இந்த விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு. என்னால் முடிந்தவரை நீண்ட ஒரு பந்தய ஓட்டுனராக இருக்க நான் நிச்சயமாக விரும்புகிறேன் என்று நடிகர் அஜீத்குமார் கூறியிருக்கிறார்.