“இது என்னுடைய நேரம்” மற்றவர்களை வைத்து என்னை நான் எடை போட மாட்டேன்… மனம் திறந்த நடிகர் அஜித்குமார்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் தனித்துவமான பண்பை கொண்டவர். சினிமாவில் நடிப்பதோடு தன்னுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடியவர் தான் அஜித். கடந்த சில வருடங்களாகவே எந்த வித டிவி சேனல்களிலும் அல்லது தனிப்பட்ட முறையிலும் youtube சேனல்களுக்கு கூட இவர் பேட்டியளிப்பதை தவிர்த்து வருகின்றார். அதனைப் போலவே பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் கூட அஜித் பங்கேற்பது கிடையாது. சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவதில் ஆர்வம் காட்டக் கூடியவர். கார் பந்தயங்கள் மூலம் அவரது கனவை நிறைவேற்றும் வேளையில் முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருக்கின்றார்.

அதில் தொடர்ந்து பல சாதனைகளையும் செய்து வருகிறார்.  ந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தயப் போட்டியில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தி இருந்தது. தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற பன்னிரண்டாவது மிச்செலின் முகேல்லோ கால்பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேசிங் அணி மூன்றாம் இடம் பிடித்தது. பெல்ஜியம் ஸ்பா பிரான்கோர்சாம்ஸ் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. தற்போது அடுத்த கார் ரேஸில் பங்கேற்பதற்காக அஜித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 54 வயதிலும் சளைக்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் அஜித் தற்போது ஜிடி4 ஐரோப்பிய கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகின்றார்.

இந்நிலையில் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை வைத்து என்னை நான் எடை போட்டுக்கொள்ள மாட்டேன். சொந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். படபிடிப்பில் காயம் ஏற்படுவதை போல தான் ரேசிங்கிலும். ஆனால் மிகவும் கவனமாக இருக்கிறேன். விரைவில் கற்றுக் கொள்கிறேன் . இது என்னுடைய நேரம். பின்வாங்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

6 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

7 மணத்தியாலங்கள் ago