Categories: சினிமா

அந்த விஷயத்துல விஜய் கூட போட்டியிடும் அஜித்.. அதுவும் தளபதி சினிமாவை விட்டு போறதுக்கு முன்னாடியே நடக்கணுமாம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் விஜய் மற்றும் அஜித். விஜய் மற்றும் அஜித் நடிப்பில் இறுதியாக ஒரே நாளில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியானது. அந்தத் திரைப்படத்திற்கு பிறகு விஜய் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து படங்களை ரிலீஸ் செய்த நிலையில் அஜித் இரண்டு வருடங்கள் ஆகியும் எந்த ஒரு படத்தையும் ரிலீஸ் செய்யாமல் இருந்தார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்த நிலையில் இறுதியாக அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் விடா முயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் விஜய் இறுதியாக கோட் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது தன்னுடைய 69ஆவது படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் இந்த படம் தான் விஜயின் சினிமா வாழ்க்கையில் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் ஜனநாயகம் திரைப்படத்தில் நடிக்க விஜய் 225 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

இப்படியான நிலையில் அஜித் விஜய் விட ஒரு கோடி ரூபாய் அதிகமாக சம்பளம் வாங்கி விட வேண்டும் விஜய் சினிமாவில் இருக்கும் போதே அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையை தான் பெற வேண்டும் என்று அஜித் எண்ணுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. அஜித்துக்கு சம்பளத்தை உயர்த்தி தர அடுத்தடுத்த தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும் லைகா நிறுவனத்திற்கு அப்படி கிடையாது.

விடாமுயற்சி திரைப்படம் லைகாவை இழுத்து மூடும் அளவுக்கு பெரிய நஷ்டத்தை கொண்டு வந்து விட்டுள்ளது. விடாமுயற்சி படம் வெளியாவதற்கு முன்பே விஜயின் மகன் சஞ்சயை வைத்து லைகா படத்தை தொடங்கி விட்டதால் வேறு வழியில்லாமல் அந்த படத்தை எடுத்து வருகிறது. இந்தப் படம் தான் லைகாவின் கடைசி படமாக இருக்கும் என வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

6 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

6 மணத்தியாலங்கள் ago