லுக்கே வேற மாதிரி இருக்கே.. ‘குட் பேட் அக்லி’ போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் செய்தியை அறிவித்த படக்குழு..!

By Mahalakshmi on ஆனி 27, 2024

Spread the love

நடிகர் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருவார்கள். இவர் கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  அதை தொடர்ந்து அவர் கமிட்டான திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்து வருகின்றது.

   

   

இந்த திரைப்படத்தை ஜவ்வு போல இழுத்துக் கொண்டே வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இன்னும் முடிந்த பாடு இல்லை. இதற்கு இடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றார்.

 

இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கு இடையில் தான் விடாமுயற்சியின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்று இருக்கின்றார். இதற்கிடையில் நடிகர் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கின்றது.

 

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து இருந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விருந்தாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருக்கின்றது.