விடாமுயற்சிக்கு வந்த அடுத்த சோதனை… ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென உயிரிழந்த பிரபலம்… சோகத்தில் மூழ்கிய படக்குழு…

By Begam

Published on:

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Vidaa Muyarch movie stills

நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வில்லனாக நடிகர் ஆரவ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்று வைத்தாலும் படத்திற்காக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி வந்தனர்.

   

இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தற்பொழுது விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள Art Director மற்றும் Production Designer மிலன் இன்று காலை படப்பிடிப்பு செல்லும் நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

கலாப காதலன் படத்தில் கலை இயக்குநராக அறிமுகமான இவர், அஜித்தின் பில்லா , வீரம், வேதாளம், துணிவு படங்களில் பணியாற்றியவர். அஜித்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரது உடலுக்கு அஜித், மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவர் மறைவை அடுத்து , ‘ விடாமுயற்சி ‘ படப்பிடிப்பு இன்று ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.