தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு ‘. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மகிழ்மேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் அஜித் தனது வேர்ல்ட் டூரின் முதற்கட்டதை நிறைவு செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. பிரபலங்கள் பற்றிய ஏதாவதொரு செய்தி மற்றும் புகைப்படங்கள் வெளியானது என்றாலே ரசிகர்கள் மத்தியில் அது வைரல் ஆவது விளக்கம். இவர் அவ்வளவாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது கிடையாது. சமீபத்தில் இவரது மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தொடங்கினார்.

இதை அறிந்த அவரது ரசிகர்கள் ஓரிரு இரண்டு நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கானோர் ஃபாலோ பண்ண தொடங்கினர். இதன் மூலம் நடிகர் அஜித் அவர்களின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அடிக்கடி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் அஜித் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் அஜித்தின் மகனா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரு என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….

