மகனின் பிறந்தநாளை வித்தியாசமான தீமில் கொண்டாடிய ‘தல’… கேக்-ல இப்படி ஒரு ஸ்பெஷலா…? வெளியான பர்த்டே போட்டோஸ்…

By Begam on பங்குனி 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

   

தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் 2000ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

   

 

சினிமாவில் பிசியாக இருக்கும் தல எப்பொழுதும் தனது குடும்பத்துக்காகவும் நேரத்தை செலவிட கூடியவர். தல அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் அஜித் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை இன்று குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

ஆத்விக்கிற்கு கால்பந்து மீது ஆர்வம் அதிகம் என்பதால் கால்பந்து வடிவிலேயே கேக் செய்து இருக்கின்றனர். தற்பொழுது நடிகர் அஜித் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.