‘இந்த லுக்குல செம்ம ஸ்மார்ட்டா இருக்காரே நம்ம தல…!’ விடாமுயற்சி லுக்கில் வலம் வரும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ…!

By Begam on புரட்டாதி 23, 2023

Spread the love

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

   

நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்று வைத்தாலும் படத்திற்காக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி வருகின்றனர்.

   

 

சமீபத்தில் அஜித் குமார் சென்னையில் உள்ள Hilton Hotel சென்றுள்ளார். அங்கு வைக்கப்பட்ட பார்ட்டியில் கலந்து கொண்ட சீரியல் நடிகர் தீபக்கும் கலந்து கொண்டுள்ளார். அவரும் நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் அங்கிருந்த ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்தை எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை  பார்த்த ரசிகர்கள் ‘இந்த லுக்குல செம்ம ஸ்மார்ட்டா இருக்காரே நம்ம தல’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…