Connect with us

CINEMA

‘தல’ இஸ் பேக்… அதிரடியாக 10 கிலோ எடையை குறைத்த நடிகர் அஜித்… லேட்டஸ்ட் புகைப்படம் படுவைரல்…

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

   

அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வில்லனாக நடிகர் ஆரவ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்று வைத்தாலும் படத்திற்காக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் கடந்த சில மாதங்களாக  நடைபெற்று  வந்தது. அங்கிருந்து எடுக்கப்படும் அஜித்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவ்வப்பொழுது வைரலாகி வந்தது. நடிகர் அஜித்தின் விடாமுயற்சி லுக்கை அறிய அவரது ரசிகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்  அஜர்பைஜான் ஷூட்டிங்கை முடித்து விட்டு, சமீபத்தில் சென்னை திரும்பினார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலானது. தற்பொழுது நடிகர் அஜித் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ”தல’ இஸ் பேக்’ என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Continue Reading

More in CINEMA

To Top