நடிகர் அமீர் நடிக்கும் புதிய திரைப்படம்… மாஸான லுக்கில் வெளிவந்த போஸ்டர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் அமீர். இவர்  நடிகர் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கார்த்தி நடித்து வெளியான பருத்திவீரன் திரைப்படத்தை இவர் இயக்கிய நிலையில் இன்னும் தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் தலைநிமிர்ந்து நிற்கிறது.

   

இப்படி அடுத்தடுத்து பல திரைப்படங்களை இயக்கி வந்த அமீர் சில படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடித்திருப்பார்.

இப்படி பல திரைப்படங்களில் பிசியாக நடித்தும் பல திரைப்படங்களை இயக்கியும் வந்த அமீர் சமீபத்தில் புது பிசினஸை தொடங்கினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி சுங்கச்சாவடி மற்றும் மாயாஜால் சினிமாஸ் அருகே இவர் புதிய ரெஸ்டாரன்ட் தொடங்கியுள்ளார். இந்த ரெஸ்டாரன்டின் தொடக்க விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் தனது குடும்பத்துடனும் , நடிகர் சூரியும் கலந்து கொண்டனர்.

தற்பொழுது நடிகர் அமீரின் நடிப்பில் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்டர் தற்பொழுது இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த போஸ்டர்…