சமீப காலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஆர்யாவின் க்யூட்டான சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் கேப்டன். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்பொழுது இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இப்படத்திற்கு ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’ என்று பெயரிட்டுள்ளனர். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ஆர்யா நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்பொழுது மனைவி மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் அவ்வப்பொழுது பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவரின் அழகான சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்….

