இன்றோடு கெடு முடிந்தது..! உச்சக்கட்ட டென்ஷனில் ராமதாஸ்… அன்புமணி மீது பாயப்போகும் நடவடிக்கை..? பாமகவில் பரபரப்பு..!!

By Soundarya on புரட்டாதி 10, 2025

Spread the love

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கு இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்தசூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியன்று  தைலாபுரம் தோட்டத்தில் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடியது. அதில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் விளக்கமளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து மீண்டும் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கமளிக்க, ராமதாஸ் கெடு விதித்திருந்தார்.

இந்நிலையில் ராமதாஸ் விதித்த கெடு இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவில் அன்புமணி அதற்கு விளக்கமளிக்கவில்லை. தற்போது, மீண்டும் கெடு விதித்தும் அதை அன்புமணி கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதனால் அன்புமணி மீது ராமதாஸ் உச்சக்கட்ட டென்ஷனில் இருக்கிறாராம். இதனால், அன்புமணி மீது தற்காலிக பொறுப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.