தமிழகத்தில் லஞ்சம் மற்றும் முறைகேடுகளை ஒழித்து உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும் வரை, தவறு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இரக்கமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீர்த்தனா எச்சரித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “லஞ்சம் வாங்கினாலோ அல்லது பிற தவறுகளில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை பாயும்; இது ஒரு தொடக்கம் மட்டுமே, மாற்றம் ஏற்படும் வரை இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும்” எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்களின் புகார்களை எளிதில் பெற 70103 27687 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை வெளியிட்டுள்ள அமைச்சர், லஞ்சம் தொடர்பான தகவல்களை இதில் தைரியமாகப் புகாரளிக்கலாம் என்றும், தவறு செய்தவர்கள் எக்காரணம் கொண்டும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் உறுதியளித்துள்ளார்.
