‘சர்வேவர்’ நிகழ்ச்சியில்  போட்டியாளர் விஜயலட்சுமியின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…  

By Samrin

Published on:

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான்  விஜயலட்சுமி. இவர் பிரபல  திரைப்படம் இயக்குனர் அகத்தியன் மகள் ஆவார் .

   

இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான  சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில்  அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அந்த நேரம்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். 2019 வெளியான  ‘கற்றது களவு’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், வனயுத்தம் ,பிரியாணி , வெண்ணிலா வீடு ,போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புபெற்றார்   .

ஒரு காலகட்டத்தில் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் ‘சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாயகி’சீரியல் மூலமாக சின்னத்திரையில் தனது தடத்தை பதித்தார்.

இந்த சீரியலில் இவர் கதாநாயகியாக வலம்  வந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வைல்ட் கார்டு என்ட்ரியாக வாய்ப்பு கிடைத்ததால் நாயகி சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின்  மூலமாக  மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.  இதை தொடர்   விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’  நிகழ்ச்சியில்நடுவராக பணியாற்றினார்.

அதன் பின்  ஜீ தமிழ்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வேவர் நிகழ்ச்சியில்  போட்டியாளராக பங்கேற்றார்.

நடிகை விஜயலட்சுமி தனது பள்ளி தோழரான பெரோஸ் முகமதுவை காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.