Connect with us

AVM மெய்யப்ப செட்டியாரை வீட்டுக்குள் விடாமல் வாசலிலேயே வைத்து பேசிய TR மகாலிங்கம் குடும்பத்தினர்… பேத்தி பகிர்ந்த ஷாக்கிங் தகவல்!

CINEMA

AVM மெய்யப்ப செட்டியாரை வீட்டுக்குள் விடாமல் வாசலிலேயே வைத்து பேசிய TR மகாலிங்கம் குடும்பத்தினர்… பேத்தி பகிர்ந்த ஷாக்கிங் தகவல்!

தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா ஆகிய இருவரும் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தனர். அவர்களுக்குப் பிறகு எம் ஜி ஆர், சிவாஜி என்ற அடுத்த சூப்பர் ஸ்டார்கள்  உருவாகினர். ஆனால் இவர்கள் இரண்டு தலைமுறைக்கு நடுவே சைலண்ட் சூப்பர் ஸ்டாராக மிக சொற்ப காலமே ஜொலித்தவர் டி ஆர் மகாலிங்கம்.

இவர் தென்கரை என்ற கிராமத்தில் கட்டுப்பெட்டித் தனமான ஒரு பார்ப்பன அக்ரஹாரத்தில் பிறந்தார். குடும்ப வழக்கப்படி இவரும் பாடல்கள் கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக பாடியுள்ளார். அதனால் இவர் புகழ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அவரை படத்தில் நடிக்க வைக்க ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து தென்கரை கிராமத்துக்கு சென்று அவரைப் பற்றி விசாரித்துள்ளார். அப்போது டி ஆர் மகாலிங்கம் குடும்பத்தினர், அவரை தங்கள் வீட்டுக்குள் விடாமலேயே வாசலிலேயே வைத்து பேசியுள்ளனர். அதற்குக் காரணம் ஏவி மெய்யப்ப செட்டியார் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதுதான். அவர்களை சமாதானைப்படுத்தி மகாலிங்கத்தை சினிமாவில் நடிக்க அழைத்துச் சென்றுள்ளார் மெய்யப்பன். இந்த தகவலை டி ஆர் மகாலிங்கத்தின் பேத்தி சூர்யா ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

   

அப்படிதான் அவர் நந்தகுமார் மற்றும் பிரகலாதா போன்ற படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி படிப்படியாக பல படங்களில் நடித்த அவர் பாகவதருக்குப் பின்னர் தமிழ்நாடே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக ஆனார். ஆனால் 50 களுக்குப் பிறகு நடிகர்களுக்கு பாடும் திறமை தேவையில்லை என்ற சூழல் உருவாக எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி போன்றோரின் ஆதிக்கம் தொடங்கியது. அதனால் டி ஆர் மகாலிங்கத்தின் மார்க்கெட் சரிய தொடங்கியது.

 

அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து கண்ணதாசன் மாலையிட்ட மங்கை படம் எடுத்த போது அவர் கதாநாயகனாக நடித்த போது செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார். இதற்கிடையில் சொந்தப் படம் எடுக்க ஆசைப்பட்டு தொடர்ந்து 5 படங்கள் எடுத்து கையை சுட்டுக்கொண்டார். அதன் பின்னர் நிலைமையை உணர்ந்துகொண்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். 1977 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண லீலா திரைப்படம்தான் அவரின் கடைசி திரைப்படம்.  1978 ஆம் ஆண்டுன் இதய முடக்கம் காரணமாக உயிரிழந்தார்.

Continue Reading
To Top