அந்த சில நிமிடங்கள்!… மாணவி மீது வெறிச்செயல்… இணையத்தில் பரவி உலுக்கிய வீடியோ… அடுத்த கணமே போலீஸ் அதிரடி…!!

By Gayathri on கார்த்திகை 3, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில், கடந்த அக்டோபர் 23 அன்று கல்லூரிக்கு நடந்துகொண்டிருந்த 19 வயது மாணவியை வழிமறித்துத் தாக்கிய கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் அரங்கேறிய இந்த அத்துமீறல் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி, இணையதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.

இக்காட்சிகளின் அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்ட முசாஃபர்நகர் காவல்துறையினர், இத்தாக்குதலில் ஈடுபட்ட ஃபர்மான் என்பவரை உடனடியாகக் கைது செய்தனர். தற்போது அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் தகுந்த சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இத்தாக்குதலுக்கான பின்னணி மற்றும் நோக்கம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.