அமெரிக்காவின் AI செய்த விபரீதம்… 2016-ன் பழைய தகவலால் பலியான 175 பிஞ்சுயிர்கள்.. அம்பலமான உளவுத்துறை குளறுபடி…!!

By Soundarya on பங்குனி 13, 2026

Spread the love

கடந்த பிப்ரவரி 28 அன்று, தென் ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள ‘ஷஜாரா தயாபா’ (Shajareh Tayyebeh) என்ற பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 175 சிறுமிகள் மற்றும் ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடக்கத்தில், இந்தப் பள்ளி மீது ஈரான் ராணுவமே தவறுதலாகத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது வெளியாகியுள்ள அமெரிக்க ராணுவத்தின் பூர்வாங்க உள் விசாரணை முடிவுகள், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தத் தாக்குதல் ஒரு “இலக்குத் தவறு” (Targeting mistake) என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஈரானிய கடற்படைத் தளம் ஒன்றைக் குறிவைத்து ஏவப்பட்ட அமெரிக்காவின் ‘டோமாஹாக்’ (Tomahawk) ஏவுகணை, அதற்கு அருகிலிருந்த பள்ளி கட்டிடத்தைத் தரைமட்டமாக்கியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம், பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வழங்கிய காலாவதியான மற்றும் தவறான உளவுத் தகவல்கள் (Outdated intelligence) ஆகும். அந்தப் பள்ளி கட்டிடம் 2016-ஆம் ஆண்டு வரை ராணுவத் தளத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது; ஆனால் பின்னர் அது பிரிக்கப்பட்டு பள்ளியாக மாற்றப்பட்ட தகவல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போது கவனிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

   

இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. போரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியே இத்தகைய பெரும் உயிர்ச்சேதத்திற்கு வழிவகுத்ததாகச் சொல்லப்படுகிறது. மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள், ஒரு பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியதை “மன்னிக்க முடியாத போர்க்குற்றம்” என்று விமர்சித்துள்ளனர். தற்போது அமெரிக்க ராணுவம் இது குறித்து விரிவான உள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.