மத்திய அரசு வைத்த ஆப்பு..! கோடைக்கு முன்பே சூடேறும் ஏசிகளின் விலை.. அதிர்ச்சியில் சாமானிய மக்கள்..!!

By Soundarya on மாசி 18, 2026

Spread the love

கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே ஏசி (Air Conditioner) விலை 10-15% வரை உயர வாய்ப்புள்ளதாக ப்ளூ ஸ்டார் (Blue Star) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. தியாகராஜன் தெரிவித்துள்ளார். மூலப்பொருட்களின் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் மத்திய அரசின் புதிய எரிசக்தி தரக்கட்டுப்பாடுகள் (BEE Star Rating) ஆகியவையே இந்த திடீர் விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

குறிப்பாக, ஜனவரி 2026 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய பிஇஇ (BEE) விதிகளின்படி, ஏசிகளின் ஆற்றல் திறன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பழைய 5-ஸ்டார் மாடல்கள் தற்போது 4-ஸ்டார் தரத்திற்கு மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்ப மாற்றமும், அதிகரித்துள்ள செம்பு மற்றும் எஃகு போன்ற உலோகங்களின் விலையும் நுகர்வோர் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.