8-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…!!  ஊரக வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on ஐப்பசி 1, 2026

Spread the love

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகின் கீழ் இயங்கும் அலங்காநல்லூர், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர், ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் அறிவிப்பை மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அலுவலக உதவியாளர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரையிலும், ஈப்பு ஓட்டுநர் பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலும், பதிவறை எழுத்தர் பணிக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையிலும் ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும். வயது வரம்பைப் பொறுத்தவரை ஆதிதிராவிடர் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி உச்ச வயது வரம்பில் சிறப்புத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

   

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மதுரை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.madurai.nic.in அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். உரிய சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ரூ.30 அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட அஞ்சல் உறையுடன் இணைத்து, வரும் அக்டோபர் 10-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.