சுதந்திரம் வாங்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு முதலாவதாக தெரிவித்த நடிகர்… பூர்ணம் விஸ்வநாதனை பற்றி பலரும் அறியாத தகவல்கள்…

Spread the love

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன். சிறுவயதில் இருந்தே தமிழ் நாடகங்களில் ஈர்க்கப்பட்ட பூர்ணம் விஸ்வநாதன் தனது 18 வயதில் மேடைகளில் நடிக்க தொடங்கினார். பின்னர் சில வருடங்கள் புதுடில்லிக்கு சென்று நடனம் மற்றும் இசை விமர்சகர் சுப்புடுவுடன் தெனிந்திய குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.

இது மட்டுமல்லாமல் பூர்ணம் விஸ்வநாதன் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். 1964 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார் பூர்ணம் விஸ்வநாதன். தனி குடித்தனம் ஊர் வம்பு மற்றும் கால் கட்டு போன்ற நாடகங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்களால் பெரும் பாராட்டுகளை பெற்றார். நாடகங்களில் நடித்துக் கொண்டே சென்னையில் உள்ள பத்திரிக்கை தகவல் பணியத்தின் உதவி தகவல் அதிகாரியாக பணியாற்றினார் பூர்ணம் விஸ்வநாதன்.

பின்னர் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட யோஜனா இதழ்களின் ஆசிரியர் மற்றும் மூத்த நிருபராக பணியாற்றினார் பூர்ணம் விஸ்வநாதன். பல நாடகங்களையும் சிறுகதைகளையும் எழுதி உள்ளார் பூர்ணம் விஸ்வநாதன். 1968 ஆம் ஆண்டு உயர்ந்த மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பூர்ணம் விஸ்வநாதன்.

தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார் பூர்ணம் விஸ்வநாதன். ராஜபார்ட் ரங்கதுரை, குரு, மூன்றாம் பிறை, பயணங்கள் முடிவதில்லை, வருஷம் 16, மகாநதி, சிறைச்சாலை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பூர்ணம் விஸ்வநாதன்.

பூர்ணம் விஸ்வநாதன் தனது வித்தியாசமான உடல் மொழியும் குரல் மாடுலேஷன்காக பிரபலமானார். இது மட்டுமல்லாமல் இவரை பற்றி பலரும் அறியாத விஷயம் என்னவென்றால் அகில இந்திய வானொலியில் பணியாற்றியபோது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த செய்தியை முதல் செய்தி தொகுப்பில் வானொலியில் அறிவித்தது பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் தான் என்பது பலருக்கும் தெரியாது. இது அவர் இருந்த வரையிலும் தனக்கு கிடைத்த பாக்கியம் பெருமைக்குரிய விஷயம் என்று கூறிக் கொண்டே இருப்பாராம்.

admin

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

6 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

6 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

6 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago