#image_title
தொழில் தொடங்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தான். ஆனால் அந்த தொழில் தொடங்குவதற்கு மூலதனமாக இருப்பது தன்னம்பிக்கை ஊக்கம் விடா முயற்சி. அது தவிர வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு இருக்க வேண்டும். தொழிலில் சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பது போல பல சம்பவங்கள் உலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒருவர் தான் IKEA பிராண்டின் நிறுவனர் இங்குவர் படோர் கம்ப்ராட். ஒரு 17 வயது சிறுவனால் இவ்ளோ பெரிய நிறுவனத்தை உருவாக்க முடியுமா என்ற ஆச்சரியம் பலருக்கு இருக்கும். அவர் எப்படி இந்த IKEA பிரண்டை உருவாக்கினார். இதன் வெற்றி கதை என்ன என்பதைப் பற்றி இனி காண்போம்.
1926 ஆம் ஆண்டு கம்ப்ராட் ஸ்வீடிஷ் மாகாணத்தில் ஒரு சிறிய பண்ணையில் பிறந்தார். கம்ப்ராட் சிறுவனாக இருந்த போதே வியாபாரத்தில் ஆர்வம் கொண்டார். சிறுவயதில் தனது சைக்கிளில் சென்று தீப்பெட்டிகளை அக்கம் பக்கம் விற்பனை செய்யும் வியாபாரத்தை தொடங்கினார். சிறு வயதிலேயே எப்படி தீப்பெட்டிகளை மொத்தமாக வாங்கி மலிவாக விற்கலாம் என்று யோசித்தார். கம்ப்ராட் அதற்கு அடுத்தபடியாக கிறிஸ்துமஸ் அட்டைகள் பெர்ரிகள் ஆகியவற்றை கொஞ்சம் விற்கத் தொடங்கினார். ஒரு பொருளை வாங்கி அதை லாபத்திற்காக மறு விற்பனை செய்யக்கூடிய தொழிலை உருவாக்க வேண்டும் என்று அவர் சிறுவனாக இருக்கும்போது யோசித்தார். 17 வயதாக இருக்கும்போது தனது தந்தையின் உதவியால் சிறிய பிராண்டாக IKEA வை தொடங்கினார்.
அவரது கடின உழைப்பினால் சேர்கள் டேபிள்கள் டீப்பாய்கள் சிறு சிறு வீட்டு உபயோக பொருட்களை விற்க ஆரம்பித்தார். அதில் அவர் கண்ட மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் இந்த வீட்டு உபயோக பொருட்கள் மிகப்பெரிய பேக்கேஜிங் எடுத்துக் கொள்வதால் அதனால் அவருக்கு ஷிப்பிங் செலவு அதிகமாக ஆனது. அதனால் மிகவும் குறைந்த பேக்கிங்கில் மரத்திலான வீட்டு உபயோக பொருட்களை தயார் செய்து பேக்கிங் செலவை குறைக்க வேண்டும் என்று எண்ணினார்.
அதன் முயற்சியாகவே IKEA பிராண்ட் பிரபலமானது. ஷிப்பிங் செலவை குறைக்க வேண்டும் என்று இவர் தயாரித்த வீட்டு உபயோக பொருட்கள் மக்களிடையே பிரபலமானது. தனித்துவமாகவும் இருந்தது. அதனால் மக்கள் இதனை ஆர்வத்துடன் வாங்க ஆரம்பித்தார். தற்போது உலகத்தில் 63 நாடுகளுக்கும் மேலாக இந்த IKEA பிரண்டு பிரபலமாக இருக்கிறது.
ஒரு 17 வயது சிறுவனால் என்ன சாதிக்க முடியும் என்று அனைவரும் கூறியவர்கள் மத்தியில் இன்று உலகத்திலேயே ஐந்தாவது பணக்காரராக ஸ்வீடனின் நம்பர் ஒன் பணக்காரராக 52 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகத்தின் மிகவும் பிரபலமான பிராண்டாக தனது நிறுவனத்தை உருவாக்கி சாதித்து காட்டி இருக்கிறார் காம்ப்ராட். இவரின் தொழில் யுக்தி மற்றும் ஆர்வம் இளம் தலைமுறைக்கு நிச்சயம் ஒரு முன்மாதிரியாகத்தான் இருக்கும்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…