#image_title
இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் இருக்கிறது. சில இடங்கள்தான் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஆனால் பலருக்கும் தெரியாத பல இடங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதுபோல்தான் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அதில் ஒன்றுதான் செஞ்சிக்கோட்டை. இந்த செஞ்சிக்கோட்டையை உருவாக்கியது யார் இதன் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
இந்தியாவில் தமிழ்நாட்டு மாநிலத்தில் தப்பி இருக்கும் மிகச் சில கோட்டைகளுள் செஞ்சிக்கோட்டை ஒன்று. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த செஞ்சிக்கோட்டை அமைந்திருக்கிறது. மாவீரர் ஆன மன்னரான சிவாஜி இந்தியாவிற்குள் எவரும் நுழைய முடியாத கோட்டைகளில் சிறந்தது இது என்று செஞ்சிக்கோட்டையை பெருமையாக பேசும் அளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்திருக்கிறது.
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள் இரண்டு சிறிய குன்றுகள் 12 கிலோமீட்டர் நீளத்திற்கு மதில் சுவர்களால் இணைந்து முக்கோண வடிவமாக அமைந்துள்ளது இந்த செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்து அழிவின் இறுதிக்கு சென்ற பின்னும் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த செஞ்சிக்கோட்டை. செஞ்சி கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் ஆனந்த் கோன் காடவன் 12 ஆம் நூற்றாண்டில் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
அதற்குப் பிறகு வந்த மன்னர்கள் இந்த கோட்டையை பராமரித்திருக்கின்றனர். சோழர்கள் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி என்று வைத்து சிங்கபுரி கோட்டை என அழைக்கப்பட்டது. பின்னாளில் செஞ்சி என ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்காபுரம் என்ற ஊர் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல்லவர்கள் உருவாக்கப்பட்டு சோழர்கள் முகலாயர்கள் நாயக்கர்கள் என அடுத்தடுத்து வந்தவர்கள் இந்த கோட்டைக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வைத்திருக்கிறார்கள்.
இந்த செஞ்சி கோட்டையில் கோவில்கள் மண்டபங்கள் குளங்கள் சுனைகள் படைவீரர்கள் தங்கும் பகுதி நெற்களஞ்சியம் எதிரிகள் கடக்க முடியாத ஆழமான அகழிகள் போன்றவை கொண்டிருக்கிறது. இவ்வளவு கம்பீரமாக இந்த அளவு நிற்கும் இந்த செஞ்சி கோட்டை 1921 ஆம் ஆண்டில் தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…