கனடாவில் பிரதமராக இருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ. ஒரு ஆசிரியராக தனது கேரியரை தொடங்கி இன்று கனடா நாட்டிற்கு பிரதமராக இருக்கிறார். இவரது வெற்றி பயணம் என்ன என்பதைப் பற்றி இனி காண்போம். ஜஸ்டின் ட்ரூடோ ஒன்டோரியாவில் உள்ள ஓட்டோவாவில் பிறந்தார். 1994 ஆம் ஆண்டு மெக்கில் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் இளங்களை பட்டம் பெற்றார் ஜஸ்டின் ட்ரூடோ.

அதற்குப் பிறகு வான்கோவரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பாடம் கற்பித்தார் ஜஸ்டின் ட்ரூடோ. 2002 ஆம் ஆண்டு தனது படிப்பை மேற்கொள்வதற்காக மாண்டீரலுக்கு இடம்பெயர்ந்தார். 2006 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் இளைஞர் புதுப்பித்தல் பணி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு இளைஞர்கள் மற்றும் பன்முக கலாச்சாரத்திற்கான லிபரல் கட்சியின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி விமர்சகராக இருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. அதற்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு கூட்டாட்சி தேர்தலில் கட்சியை பெரும்பான்மைய அரசாங்கத்திற்கு வழி நடத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ. கனடா வரலாற்றில் இரண்டாவது இளம் பிரதமர் என்ற பெருமையை பெற்றார் ஜஸ்டின் ட்ரூடோ.
தனது ஆட்சி காலத்தில் மக்களின் நலனுக்காக பல முயற்சிகளை எடுத்திருக்கிறார். குழந்தைகள் நலன்களை நிறுவுதல் மருத்துவ உதவிகளை சட்டபூர்வமாக்குதல் கனடா அமெரிக்கா மெக்ஸிகா ஒப்பந்தம் பாரிஸ் ஒப்பந்தம் போன்றவற்றை மேற்கொண்டார் ஜஸ்டின் ட்ரூடோ. சிறுவயதிலிருந்தே ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியை ஆதரித்து வந்திருக்கிறார். அந்த கட்சியில் இணைந்து பிறகு இன்று வரை இந்த கட்சியை வெற்றியை நோக்கி வழிநடத்தி பயணித்துக் கொண்டிருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.

2015 முதல் தற்போது வரை ஜஸ்டின் ட்ரூடோ தான் கனடாவின் பிரதமராக இருந்து வருகிறார். மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்திய ஜஸ்டின் ட்ரூடோவிற்கு லண்டன் ராணி எலிசபத்தின் வைர விழா பதக்கம் கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் விருது ஸ்காட்லாண்டின் எடின்பற் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஆப் லாஸ் பட்டம் ஆகிய கவுர பட்டங்களை தன்னகத்தே கொண்டு மக்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறார் ஜஸ்டின் ட்ரூடோ.
