தென்னிந்தியாவில் பிரபலம் வாய்ந்த சிமெண்ட் நிறுவனம்… India Cements தமிழ்நாட்டில் நிறுவப்பட்டது எப்படி தெரியுமா….?

By admin on ஐப்பசி 9, 2024

Spread the love

தென் தமிழகத்தில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த நிறுவனம் தான் India Cements. வியாபாரம் மட்டுமல்லாது பல பள்ளிகளையும் நிறுவி அரசோடு இணைந்து பல தொண்டு காரியங்களை செய்தது India Cements நிறுவனம். கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த எஸ் என் என் சங்கரலிங்க ஐயர் மற்றும் அவரது இளம் பங்குதாரராக டி எஸ் நாராயணசாமி ஆகியோரால் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1946 இல் உருவாக்கப்பட்ட தென்னிந்தியாவின் ஆரம்பகால சிமெண்ட் நிறுவனங்களில் ஒன்றுதான் India Cements.

   

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு அபரிதமாக வாய்ப்பு இருக்கிறது என்று நம்பிய சங்கரலிங்க ஐயர் தாழையூத்து என்ற கிராமத்தில் சிமெண்ட் ஆலையை நிறுவினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக இந்த தொழிற்சாலை இன்னும் திருநெல்வேலியின் முக்கியமான அடையாளமாக இருக்கிறது. பல பேருக்கு வேலை வாய்ப்பினையும் அளித்திருக்கிறது India Cements.

   

தாழையூத்தில் சுமார் ஏழு சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவினார் சங்கரலிங்க ஐயர். சங்கர் சிமெண்ட் மற்றும் கோரமண்டல் சிமெண்ட் போன்றவற்றை அவர்கள் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய பிராண்டுகள் ஆகும். தாழையூத்து என்ற ஊரின் பெயர் பின்னாளில் இந்த சிமெண்ட் ஆலையை குறிக்கும் வகையில் சங்கர் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது மட்டுமல்லாமல் கிரிக்கெட் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் டி என் பி எல் போன்றவற்றிற்கு இவர்கள் ஸ்பான்சர் செய்து நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 7 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 

வேலைவாய்ப்பு மட்டும் அளிக்காமல் சங்கரலிங்க ஐயர் வேலை பார்ப்பவர்களுக்காகவே குவாட்டர்ஸ் வீடுகளையும் கட்டிக் கொடுத்து தனது தொழிலாளர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறார். இவ்வளவு பிரபலமாக தென் தமிழகத்தில் இருந்த இந்தியா சிமெண்ட்ஸின் பெரும்பாலான பங்குகளை ஆதித்யா பிர்லாவின் அல்ட்ராடெக் சிமெண்ட் இந்த ஆண்டு வாங்கி இருக்கிறது. இருந்தாலும் அந்த ஊர் என்றாலே இந்த தொழிற்சாலை தான் அனைவருக்கும் ஞாபகம் அளவுக்கு திருநெல்வேலியில் முக்கியமான ஒரு பிராண்டாக திகழ்கிறது India Cements .