திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடப்பதன் சிறப்பு என்ன…? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா…!

Spread the love

தீபாவளிக்கு அடுத்ததாக ஐப்பசி மாதம் கொண்டாடப்படுவது கந்த சஷ்டி. திருச்செந்தூரில் நடைபெறும் இந்த கந்த சஷ்டி மிகவும் பிரபலம் வாய்ந்தது. சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்ததைத்தான் கந்த சஷ்டியாக கொண்டாடுகிறார்கள். இந்த விரதத்தின் கடைசி நாளில் சூரபத்மனை முருகன் சூரசம்ஹாரம் செய்வார். திருச்செந்தூர் ஸ்தலத்தில் தான் இந்த சூரசம்ஹாரம் நடைபெற்றாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் சன்னதிகளிலும் இந்த கந்த சஷ்டி விமர்சையாக அனுசரிக்கப்படுகிறது. திருச்செந்தூரில் நடைபெறுவதற்கான சிறப்பு என்ன எதனால் நடைபெறுகிறது என்பதை பற்றி இனி காண்போம்.

அசுரர்களின் அசுரனாக இருந்த சூரத்மன் வீர மகேந்திரபுரி என்னும் சிறிய தீவு நாட்டில் வசித்து வந்தான். இந்தத் தீவு இலங்கைக்கும் தெற்கே இருந்திருக்கிறது. லெமூரியா கண்டம் அழிந்தபோது இந்த தீவு கடலால் சூழப்பட்டு கடலுக்கு அடியில் சென்று விட்டது என்கிறார்கள். இந்த தீவுக்கு செல்ல திருச்செந்தூர் மார்க்கமாகவே தான் செல்ல முடியும். தேவர்கள் முனிவர்கள் என அனைவரையும் கொடுமை செய்து கொண்டிருந்ததால் அவர்களை காப்பாற்றுற்காக சூரபத்மனுடன் போர் புரிவதற்காக திருச்செந்தூரில் வந்து படைவீடு அமைந்திருந்தார் முருகப்பெருமான்.

இந்த கந்த சஷ்டி ஆரம்பமாகி 7 நாளுமே போர்க்காலம்தான். முதலில் போர் செய்வதற்கு முன்பு சூரபத்மனுடன் பேசிப் பார்ப்போம் என்று முருகப்பெருமான் வீரபாகுபை தூது அனுப்பினார். இது தான் கந்தசஷ்டி முதல் நிகழ்வாக நடைபெறும். இரண்டாவது நாள் சூரனின் மகன் வச்சிரவாகு மூன்றாவது நாள் சக்கரவாகு ஆகியோரை முருகனின் படைகள் வீழ்த்தி விடுகின்றனர்.

அடுத்ததாக நான்காவது நாள் தான் முருகன் போர் செய்யும் இடத்தில் களமிறங்குகிறார். சூரனும் போருக்கு தயாராகிறான். திருச்செந்தூர் கடற்கரையில் சூரனுக்கும் முருகனுக்கும் ஆறு நாட்கள் கடும் போர் நடக்கிறது. அந்த ஆறு நாட்களும் முருகன் வெற்றிக்காக அனைவரும் விரதம் இருந்தனர். அதனால்தான் இந்த ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருக்கின்றார்கள்.

ஆறு நாள் போர் முடிவில் சூரபத்மனை வென்று வெற்றி வாகை சூடுகிறார் முருகப்பெருமான். இதைத்தான் கந்த சஷ்டி ஏழாவது நாள் சூரசம்காரம் என்கிறார்கள். ந்த நேரத்தில் தான் மயிலை வாகனமாகவும் சேவலை கொடியாகவும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார் முருகப்பெருமான். திருச்செந்தூரில் இந்த முருகன் வதம் நடைபெற்றதால் வருடம் ஒருமுறை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமாள் சூரசம்காரம் செய்வதற்கு ஏதுவாக திருச்செந்தூர் ஆலய கடலானது சூரசம்காரம் நடைபெறும் நேரத்தில் அது உள்முகமாக சென்று விடுமாம். அந்த நிகழ்வு இன்று வரைக்கும் காணலாம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். சூரபத்மனை வென்ற பிறகு இந்திரன் தேவயானி முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அதுவே கந்த சஷ்டி எட்டாவது நாள் திருக்கல்யாணம் வைபோகம் நடைபெறும். ன்றைய தினம் கந்தசஷ்டி விரதம் நிறைவுபெறும். திருச்செந்தூரில் சூரசம்காரம் நடைபெறுவதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் சிறப்புகள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

6 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

7 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

7 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

7 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

7 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago