இந்தியா ஒரு புண்ணிய மற்றும் ஆன்மீக பூமி. இங்கு பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் பாரம்பரியமான இடங்கள் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட அடையாளங்கள் பல இருக்கின்றன. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக இந்தியாவிற்கு ஈர்க்கும் விஷயங்களில் ஒன்றாகும். பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் ஆனாலும் சரி அடையாளங்கள் ஆனாலும் சரி அடுத்தடுத்த படை எடுப்பின் போது அழிந்தாலும் பலவும் காலம் தொற்று இன்றளவும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் சித்தரால் சமண கோவில் ஆகும். அதைப்பற்றி இனி காண்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த சித்தரால் சமண கோவில். இதனை அங்குள்ள மக்கள் சித்தரால் குகை கோயில் என்றும் சித்தரால் பகவதி அம்மன் கோவில் என்றும் அழைக்கின்றனர். இந்த சித்தரால் குடைவரை கோவில் மலையில் இருக்கும் பாறையை குடைந்து கட்டுவது போல் அமைந்திருக்கிறது. இது கிபி ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டுக்கு உள்ளே கட்டப்பட்டிருக்கிறது.
இந்த சித்தரால் குடவரை கோவிலில் சமண சமயத்தில் மகாவீரர், பாசுவநாதர் போன்ற தீர்க்கதரிசிகள் மற்றும் பத்மாவதி தேவதையின் சிற்பங்களும் யட்சர்கள் மற்றும் யட்சனைகள் சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திகம்பர சமண பிரிவினர் நிறுவி இந்த கோவிலை இருக்கின்றனர். முதலாம் மகேந்திரா வர்ம பல்லவ மன்னர் ஆட்சிக்காலத்தில் சித்தரால் கிராம பகுதி சமணர்களின் செல்வாக்கு நிறைந்த இடமாக இருந்திருக்கிறது.
சமணர்களுக்கு தனது ஆட்சி காலத்தில் அதிகமாக முக்கியத்துவம் கொடுத்திருந்தார் மகேந்திரவர்ம பல்லவ மன்னன். இந்த சித்தரால் குடைவரை கோவிலில் மண்டபம் மற்றும் பலிபீடம் சமையலறைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இங்குள்ள மூன்று முக்கிய சந்ததிகளின் நடுவில் மகாவீரர் சிற்பமும் இருபுறங்களில் பாசவநாதர் மற்றும் பத்மா தேவியின் சன்னதியும் இருக்கிறது. இந்த குடவரை கோவிலுக்கு அருகில் இயற்கையால் அமைந்த குளம் ஒன்றும் இருக்கிறது.
13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்த குடவரை கோவிலில் பகவதி அம்மனை பிரதிஷ்டை செய்து இந்து சமய கோவிலாக வழிபாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. முன்னர் இந்த சித்தரால் குடைவரை கோவில் சமண சமய துறவிகளின் சமய கல்விக்கூடமாக விளங்கி இருக்கிறது என இங்குள்ள தமிழ் கல்வெட்டுகள் மூலம் நமக்கு தெரிகிறது. தற்போது இந்த சித்தரால் குடைவரை கோயில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.