thalassery fort

17 வது நூற்றாண்டில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க கட்டப்பட்ட கோட்டை… கேரளா டெல்லிச்சேரி கோட்டையின் வரலாறு…

By admin on மார்கழி 12, 2024

Spread the love

டெல்லிச்சேரி கோட்டை கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி என்ற இடத்தில் அமைந்து இருக்கிறது. தலச்சேரி கேரளாவின் மிக முக்கியமான ஐரோப்பிய வர்த்தக மையங்களில் ஒன்றாகும். இந்த கோட்டை கடலுக்கு கீழே ஓடும் தாழ்வான மலைகளின் மீது அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

பிரெஞ்சுக்காரர்கள் டெல்லிச்சேரியில் வர்த்தகத்தில் ஈடுபட்டு தலசேரியில் ஒரு கோட்டையை நிறுவினர். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் டெல்லிசேரிக்கு வடக்கே ஒரு தொழிற்சாலையை திறந்தனர். பின்னர் அவர்கள் கொளத்து நாட்டின் ஆட்சியாளர் இடம் இருந்து ஒரு இடத்தை பெற்று தொழிற்சாலையை நிறுவினார்கள்.

   

இருந்தாலும் கோலத்திரி குடும்பத்தின் உதயமங்கலம் கிளையிச்னரும் உள்ளூர் தலைவரான கொரங்கோத் நாயரும் இந்த நடவடிக்கை எதிர்த்து தாக்குதலை தொடங்கினர். அது ஆங்கிலேயாரின் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது. வர்த்தக நடவடிக்கைகளை பாதுகாப்பதற்காக கோலத்திரி ராஜாவின் ஆதரவுடன் டெல்லிசேரியில் புறம்போக்கு மலையை சுற்றி ஒரு கோட்டையை கட்டினார்கள். அது தான் இந்த டெல்லிச்சேரி கோட்டை ஆகும்.

 

இந்த டெல்லிச்சேரி கோட்டை 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு அங்கு ஆட்சியாளர்களாக இருந்த மன்னர்கள் மைசூர் ராஜ்யத்தில் ஆட்சியாளரான ஹைதர் அலி திப்பு சுல்தான் போன்றோர் இந்த கோட்டையை ஆக்கிரமிக்க முயற்சி செய்திருக்கின்றனர். 1792 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பிரவேசத்தால் இந்த மாவட்டமும் இந்த கோட்டையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிறகு இந்த கோட்டை ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது.

இந்த டெல்லிச்சேரி கோட்டையில் லேட்டரைட் தொகுதிகளால் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கோட்டையில் கடலுக்குள் ரகசிய சுரங்கங்கள் சிக்கலாக செதுக்கப்பட்ட பெரிய கதவுகள் கலங்கரை விளக்கம் ஆகியவைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை ஒரு காலத்தில் தலச்சேரியின் வளர்ச்சியின் மையமாக இருந்தது. 1921 ஆம் ஆண்டு முதல் இந்த டெல்லிச்சேரி கோட்டை இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.