மத்திய மாநில அரசுகள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கும் பல சலுகைகளும் உதவி தொகையும் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தமிழக அரசு வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது. இதில் எப்படி விண்ணப்பிப்பது இதை வாங்குவதற்கு யார் தகுதியானவர்கள் போன்ற முழு விவரங்களை பற்றி இனி காண்போம்.

இந்த தமிழக அரசின் வேலையில்லா இளைஞர்களுக்கு தரக்கூடிய உதவித்தொகையை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அனைவரும் தகுதியுடையவர்கள் ஆவர். மாற்றுதிறனாளிகளைப் பொறுத்தவரை எழுத படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு மேல்நிலை வகுப்பு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளாகவும் இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும்.
இந்த வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 75 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. பிற உதவித்தொகைகளையோ அல்லது முதியோர் உதவி தொகை பெறுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த உதவி தொகையை பெறுவதற்கு தகுதியில்லை. மேலும் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் பயலுபவராக இருக்கக் கூடாது வேறு தனியார் வேலைகளில் இருந்து சம்பளம் பெறுபவர்களாக அல்லது சுய தொழில் செய்ப்வராக இருக்கக்கூடாது.
இந்த வேலையில்லா இளைஞர்களின் உதவிதொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பெயில் ஆனவர்களுக்கு ரூபாய் 200 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 300 பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 400 பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 600 கிடைக்கும். மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி ரூ 600, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி ரூபாய் 750, பட்டப்படிப்பு தேர்ச்சி ரூபாய் 1000 கிடைக்கும்.

இந்த உதவித்தொகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி கல்லூரி மாற்று சான்றிதழ், குடும்ப அட்டை ஆகியவற்றை நேரில் கொண்டு வந்து விண்ணப்ப படிவத்தை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பதிவு செய்து பயன்பெறலாம். இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் எந்த சிரமமும் இன்றி உதவி தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
