சென்னை மெரினாவின் அடையாளம்… சுந்தரி அக்கா கடையின் வெற்றி கதை…

Spread the love

சென்னையில் பல சிறப்பு மிக்க இடங்கள் இருக்கிறது. சென்னையின் அடையாளமாக இருப்பது மெரினா கடற்கரை. இந்த மெரினா கடற்கரையில் பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் உணவு கடைகள் இருக்கின்ற. அதில் மிகவும் பிரபலமானது தான் சுந்தரி அக்கா கடை. சுந்தரி அக்கா கடையில் என்ன சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றி இனிக் காண்போம்.

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் வழியாக சுற்றி வரும் போது அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் இருப்பார்கள். அது தான் சுந்தரி அக்கா கடை. சுற்றுலா பயணிகள் ஆகட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் கல்லூரி மாணவர்கள் என பலர் இந்த கடையை தேடி வந்து உணவு சாப்பிட்டு செல்கிறார்கள். சுந்தரி அக்கா கடையின் உரிமையாளர் சுந்தரி சேகர் என்பவர் தான். ஒவ்வொரு நாளும் 11 வகை அசைவ உணவுகள் மீன் வருவல் என 18 வருடங்களாக தொடர்ந்து ருசியான கடல் சார்ந்த உணவுகளை விற்பனை செய்து வருகிறார் சுந்தரி.

கடல் உணவுகள் அனைத்தும் சுந்தரி அக்கா கடையில் இருக்கும். மெரினாவில் என்னதான் பலதரப்பட்ட உணவகங்ள் இருந்தாலும் இவரதுக்கடையும் தனித்துவமான சுவை மக்களை கவர்ந்திருக்கிறது. இறால் கனவா ண்டு மீன் குழம்பு சாதம் மட்டன் தலை வருவல் என பலதரப்பட்ட வெரைட்டிகள் இங்கு இருக்கிறது. இந்த கடைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதற்கு காரணம் சுந்தரி அக்கா பயன்படுத்தும் ரகசியமான வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா தான். 52 வயதான சுந்தரி சிரித்துக் கொண்டே அனைவரையும் கவனித்து சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் தனது வீட்டின் அருகே போண்டா சட்னி வடை என விற்பனை செய்து வந்த சுந்தரி 2000 ஆம் ஆண்டு அவரது கணவர் சேகர் உதவியுடன் மெரினாவில் உணவு கடையை தொடங்கினார். கடல் உணவுகளை மையமாக வைத்து அவர் சுந்தரி அக்கா கடையை நடத்தி வந்துள்ளார். இவரின் கை பக்குவத்தில் கடை மிகவும் பிரபலம் அடைந்தது. 2005 ஆம் ஆண்டு அவரது கணவர் இறந்த போது அவர் மனம் தளராமல் இந்த கடையை தனது உழைப்பால் இரண்டு மகள்களின் ஆதரவால் மென்மேலும் வளர செய்திருக்கிறார்.

தன்னம்பிக்கை விடாமுயற்சி உழைப்பு இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சுந்தரி அக்கா இருக்கிறார். தினமும் இவர் கடையில் கூட்டம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. நீங்களும் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றால் இவர் கடையில் ஒருமுறை வாங்கி சாப்பிட்டு ருசித்துப் பாருங்கள்.

admin

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

7 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

7 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

7 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago