பழம்பெரும் நடிகை CID சகுந்தலா காலமானார்… இவர் யாருடன் அதிகமாக நடித்திருக்கிறார் தெரியுமா…?

By admin on புரட்டாதி 18, 2024

Spread the love

CID சகுந்தலா எனப்படும் அருணாச்சலம் சகுந்தலா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை மற்றும் டான்சர் ஆவார். இவர் முதல் முதலாக நடிகையாக நடித்த திரைப்படம் CID சங்கர். அதை தொடர்ந்து அவர் CID சகுந்தலா என்ற பெயரால் அழைக்கப்பட்டார். இன்று பழம்பெரும் நடிகையான CID சகுந்தலா மாரடைப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 84 என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சினிமாவிற்குள் எப்படி வந்தார் அவரது வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

சகுந்தலாவின் பூர்வீகம் சேலம் அரிசிபாளையம் ஆகும். தமிழ் திரைப்படமான சகுந்தலையின் நினைவாக அவரது பெற்றோர் இவருக்கு சகுந்தலா என்று பெயர் வைத்தனர். சென்னையில் லலிதா பத்மினி ராகினி என்ற திருவாரூர் சகோதரிகள் தொகுத்து வழங்கிய நடன நிகழ்ச்சியில் முறையாக நடனம் கற்று தேர்ந்தார் சகுந்தலா. அதற்குப் பிறகு படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்தார் சகுந்தலா.

   

ஆரம்பத்தில் சூரியன் மேற்கேயும் உதிக்கும் என்ற நாடகத்தில் நடித்தார் சகுந்தலா. அதற்குப் பிறகு ஐட்டம் பாடல்களில் நடனம் ஆடினார். பின்னர் கதாநாயகியின் தோழியாக என்று சிறிய சிறிய வேடங்களில் நடித்த பிறகு படிப்படியாக உயர்ந்து கதாநாயகியாக ஆனார் சகுந்தலா.

 

சிவாஜியின் படிக்காத மேதை, கை கொடுத்த தெய்வம், திருடன், தவப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி, பாரத விலாஸ், ராஜராஜ சோழன், பொன்னூஞ்சல், எங்கள் தங்க ராஜா, வைரநெஞ்சம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சகுந்தலா. கீழ்வானம் சிவக்கும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் சகுந்தலா.

சிவாஜி, எம்ஜிஆர், ஜெயசகர் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமான சகுந்தலா அதிகமாக ஜெய்சங்கர் உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். சினிமா தவிர சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் சகுந்தலா. 1999 முதல் 2019 வரை சன் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி போன்ற தொலைக்காட்சி சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்நாள் இறுதி வரையிலும் சினிமாக்காகவே அர்ப்பணித்திருந்தவர் சகுந்தலா.